புழல்-ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா.
புழல் ஊராட்சி ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர். ஓ. வி. நாராயணன் தலைமை தாங்கினார்.அனைவரையும் ஆசிரியை.சரளா வரவேற்றார்.செங்குன்றம் சட்டம், ஒழுங்கு காவல் ஆய்வாளர்.புருஷோத்தமன் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டி பேசினார்..சிறப்பு அழைப்பாளராக செங்குன்றம் நெல்,அரிசி வணிகர் சங்க செயலாளர். லோகநாதன் கலந்து கொண்டார்.புழல் வட்டார கல்வி அலுவலர்கள். ராஜேந்திரன், மாரியம்மாள்முன்னாள் மாணவர்கள் செல்வமணி, சிவகுமார், கல்வி நாதன் சதானந்தம், ஆறுமுகம், பழனி, சீனிவாசன், மாணிக்க மலை கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியை. லலிதா நன்றி கூறினார்.