fbpx
Others

பிரதமர் மோடி–2024 நாடாளுமன்றத் தேர்தலில்தமிழ்நாட்டில் போட்டியா…..?

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர்மோடி செல்லும் இடமெல்லாம் தமிழ் மொழியில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும்போது தொடர்ச்சியாக தமிழ்நாட்டிச் சேர்ந்த நபர்களை பாராட்டி வருகிறார். அண்மையில் பாப்புவா நியூ கினியா நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்று அந்த நாட்டின் மொழியில் திருக்குறளின் மொழி பெயர்ப்பை வெளியிட்டார்.   திருக்குறளின் மேன்மையும் அது சொல்லும் அறநெறியும் உலகில் வேறு எங்கும் காண முடியாது என்று பிரதமர் பேசியது கவனிக்க தக்க வேண்டியதாக அமைந்தது. அது மட்டுமில்லாமல் 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர், இந்தியர்களுக்கான மொழி தமிழ் என கூறினார்.  இது மட்டுமல்லாமல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதீனங்கள் அழைக்கப்பட்டனர். மேலும் தமிழ்நாட்டை சிறப்பிக்கும் வகையில் 1947 ஆம் ஆண்டு நேருவிடம் கொடுக்கப்பட்ட சோழர் கால செங்கோலை புதிய நாடாளுமன்றத்தில் நிறுவினார். பிரதமர் மோடி தொடர்ச்சியாக தமிழுகுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், 2024 நாடாளுமனற தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட உள்ளதாக உலா வரும் செய்திகள் உண்மையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு கடந்த ஆண்டு இறுதியில் ராமநாதபுரத்தில் நடத்தப்பட்ட ஆய்வும் முக்கிய காரணமாக அமைகிறது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை பிரதமர் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை முன் வைக்க உள்ளதாக என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பிரதமர் மிகுந்த அன்பு கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர்எல்.முருகன்கூறுகிறார்.இருந்தபோதும்தமிழ்நாட்டில்பிரதமர்மோடிபோட்டியிடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close