fbpx
Others

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்…

தனது வீட்டின் கட்டுமானப்பணிகளை தடுப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்:    காவல் துறை நினைத்தால் பாதிக்க பட்டவருக்குஉதவலாம்..

கோவை., ஏப்., 12 :

கோவை, திருச்சி ரோடு, ஹவேஸ் காலனி A(1), பிளலாக் எண்-28 என்ற வீட்டில் வசித்து வருபவர் ஹேமலதா (40) இவரது கணவர் ஜோதி (45) தலைமை காவலராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஹேமலதாவின் தாயர் லீலாவதிக்கு 1987 இல் தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீட்டை புதுப்பிக்கும் கட்டுமான பணிகளை லீலாவதியின் மகள் ஹேமலதா செய்து வருகிறார். இந்நிலையில் அருகில் வசிக்கும் சரோஜினி என்பவர் வீட்டின் பின்புரம் வழியாக உங்கள் வீட்டின் கட்டுமான வேலைகளை செய்யகூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார். இதையடுத்து ஹேமலதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற உத்தரவில் மேற்படி ஹேமலதா தனது வீட்டிற்கு கட்டுமான பணிக்காக சரோஜினி வீட்டின் முன்புர வழியாக சென்று தனது வீட்டின் பூச்சு வேலைகளை மேற்கொள்ள தீர்ப்பளித்துள்ளது. ஆனால் சரோஜினி என்பவர் வீட்டின் பூச்சு வேலைகளை தடுத்து நிறுத்தியும், சாதி பெயரை பயன்படுத்தியும், கொலை மிரட்டலும், ஹேமலதாவை தகாத வார்தைகளால் திட்டி உள்ளார். இது குறித்து ஹேமலதா கூறுகையில்: ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் தன்னை சாதி ரீதியாக ஆபாசமாக பேசியதாக முன்பே புகார் அளித்துள்ளதாகவும்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தனக்கு எந்த உதவியும் காவல் துறை வழங்கவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் சரோஜினி, ஹேமலதாவிடம் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருவதாகவும், நீதிமன்றம் தீர்பளித்தும் அதை ஏற்காமல் தனக்கு இடையூறு செய்வதாகவும், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், எனவே கோவை மாநகர காவல் ஆணையர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி, தனது வீட்டின் கட்டுமான பணிகளை காவல்துறையின் பாதுகாப்புடன் மேற்கொள்ள உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்

Related Articles

Back to top button
Close
Close