fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

இன்று முதல் சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது – ரிசர்வ் வங்கி உத்தரவு

சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இன்று முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னர் ரிசர்வ் வங்கி டிசம்பர் 31-ஆம் தேதி முதல் சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது என்று உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று முதல் இ வி எம் சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இந்த சிப் பொறுத்தப்படாத கார்டுகளை வைத்து பணம் எடுக்கவோ , கடைகளில் ஸ்வைப்பிங் செய்து பொருட்களை வாங்கவோ இன்று முதல் முடியாது.

2008-க்கு முன் வங்கிகளால் வழங்கப்பட்ட யூரோ பே , மாஸ்டர் கார்டு , விசா ரக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் சிம் கார்டு போன்ற சிப் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதன் பின் சில வங்கிகளால் கொடுக்கப்பட்ட கார்டுகளிலும் மேக்னட்டிக் ஸ்டிரைப் மட்டுமே உள்ளது.

அதனை ஸ்கிம்மர் கருவிகளின் மூலம் எளிதில் மாற்றிவிட முடியும் என்பதால் , சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை விநியோகம் செய்ய 2015-ஆம் ஆண்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரைசெய்தது. நம் நாட்டில் சில நாட்களாகவே டெபிட் , மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் ஏராளமான மோசடிகள் நடந்து வருகின்றது. இத்தகைய மோசடிகளை தடுக்கும் வகையில் சிப் பொருத்தப்பட்ட புதிய டெபிட் , மற்றும் கிரெடிட் கார்டுகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய 2015-ஆம் ஆண்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் டெபிட் , மற்றும் கிரெடிட் கார்டுகளை கோரி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று வங்கிகள் தெரிவித்துள்ளது.

இல்லையென்றால் வங்கிகளுக்கு நேரடியாகவே சென்று சிப் பொருத்தப்பட்ட புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு கடைசி தேதியாக நேற்று வரை அதாவது டிசம்பர் 31-ஆம் தேதி வரை வங்கிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனவே தற்போது ஜனவரி 1 ஆம் தேதி முதல் சிப் பொறுத்தப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது என்ற உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close