தாளவாடி அருகே கூட்டமாக சுற்றி திரியும் யானைகளால் மக்கள் பீதி…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி காட்டை விட்டு சாலையில் கடந்து செல்வது வழக்கம்.இந்நிலையில் ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் கர்நாடக மாநிலம பந்திபூர் புலிகள் காப்பகம் எத்திக்கட்டை வனப்பகுதியில் இருந்து இன்று திடீரென 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக சாலையை கூட்ட கூட்டமாக கடந்து சென்றன. அந்த யானைகள் அங்குள்ளவனபகுதியில்தஞ்சமடைந்துசுற்றிவருவதால்அந்தபகுதிமக்கள்பீதியடைந்துள்ளனர்.ரோட்டில் யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து செல்வதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துவாகனத்தைசற்றுதொலைவில் நிறுத்தி விட்டனர். சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் இருந்து செல்போனில் யானை கூட்டத்தை படம் பிடித்தனர். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு யானை கூட்டம் ரோட்டை கடந்து மீண்டும் வனபகுதிக்குள் சென்றன. அதன் பின்னரே வாகனங்கள் அங்கிருந்து செல்ல தொடங்கியது. 40க்கும் மேற்பட்ட யானைகள் ஜீரஹள்ளி அருகே வட பகுதியில் சுற்றி வருவதை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.