தமிழகத்தில் பெண் போலீஸாருக்கு பயிற்சி…
தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளுவதில் பெண் போலீஸாரின் தொழில்முறை திறன்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திறன் பயிற்சிவழங்கப்படும்எனமுதல்வர்ஸ்டாலின்அறிவித்திருந்தார். இந்நிலையில், இதனைச் செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள பெண் சார்பு ஆய்வாளர்கள் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரை உள்ள 2,100 பெண் காவல் அதிகாரிகளுக்கு 5 நாட்கள் தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்திலும், 2-ம் நிலை பெண் காவலர்முதல்சிறப்புஉதவிஆய்வாளர்வரைஉள்ள23,805பெண்போலீஸாருக்கு 3
நாட்களும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.அந்தவகையில், சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம்,மதுரை,திண்டுக்கல்,ராமநாதபுரம்,திருநெல்வேலிஆகிய 15பணியிடைபயிற்சிமையங்களிலும், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய 7 இடங்களில் உள்ள காவல் பயிற்சி பள்ளிகளிலும் டிஜிபி (பயிற்சி) சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, ரூ.91.57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..