செங்குன்றத்தில்புழல் ஒன்றிய பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்…
செங்குன்றத்தில் பஸ் நிலையம் அருகில் புழல் ஒன்றிய பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டுமாபெறும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிமாவட்ட செயலாளர் வடகரை அருண்குமார் வரவேற்க, புழல் மண்டல் தலைவர் செங்குன்றம் ஆர்.ஜி.எஸ் ரஜினி தலைமையில் நடைபெற்றது.சென்னை மேற்கு மாவட்ட தலைவர். அம்பத்தூர் ஜி.பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான நமீதா, மாநில துணை தலைவர் ம.வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுசபயனாளிகளுக்குநலத்திட்டஉதவிகளைவழங்கினர்.இப்பொதுக்கூட்டத்தில் நடிகை நமீதா பேசுகையில் தமிழ்நாட்டில் பாஜக ஆதரவுடன் நல்லாட்சி மலரும், அனைத்து துறையிலும் தமிழ்நாடு முதலிடம் பெறும் என்றார்.பின்னர் பாஜக மாநில துணை தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது எனவும், விடுதியில் தங்கிப் பயிலும் தலித் மாணவர்களுக்கு ஒருநாள் உணவுச் செலவிற்கு 50 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது என்றும், ஆனால் மோப்ப நாய்க்கு 200 ரூபாய் கொடுக்கப்படுகிறது எனவும் மோப்ப நாயை விட பட்டியல் இன மாணவர்கள் மிகக் கேவலமானவர்கள் என திமுக அரசு நினைக்கிறது என சாடினார். பட்டியல் இன மாணவர்களின் உணவிற்கான தொகையை அதிகரித்து வழங்காவிட்டால் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் எஸ்.சத்யா, சி.பிரகாஷ்,எம். ஏ. குமரன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஏ.செல்வகுமார், ஏ.ரஜினிகாந்த் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ராஜா, முன்னாள் மாவட்ட தலைவர்கள் எம்.மனோகரன், சென்னை சிவா, மாதவரம் தொகுதி சக்தி கேந்திரம் பொறுப்பாளர் ஆர்.எஸ்.சத்யநாராயணன், சோழவரம் ஒன்றிய மண்டல் தலைவர் டி.பாலச்சந்தர், மாதவரம் கிழக்கு மண்டல் தலைவர் டி.நந்தினி, மாதவரம் வடக்கு
மண்டல்தலைவர்யு.கே.மணிகண்டன், மாதவரம் தெற்கு மண்டல் தலைவர் ஜெ.கண்ணன், மாதவரம் மேற்கு மண்டல் தலைவர் எஸ்.பாண்டியராஜ், சோழவரம் மத்திய மண்டல் தலைவர் ஆர்.வினோத் பெருமாள், வில்லிவாக்கம் வடக்கு மண்டல் தலைவர் ஆர்.மணிகண்டன் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் மண்டல் பொதுச் செயலாளர்கள் எஸ்.குமார், எம்.மாலா, மண்டல் பொருளாளர் கே.டி.சீனிவாசன் ஆகியோர் நன்றி கூறினர்.