Others
சர்ச்சைகளில் சிக்கும் கர்நாடக அரசு –சித்தராமையாவுக்கு நெருக்கடி..?
தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவில் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும்ஆட்சியைநடத்திவருகிறார்கள். இந்த நிலையில், ஆட்சியதிகாரத்தைப் பறிகொடுத்த பா.ஜ.க., மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து சித்தராமையா பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்திவருகிறது.சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது ஊழல் புகார்கள் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை பா.ஜ.க தொடர்ந்து எழுப்பிவருகிறது. தற்போது, ‘மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய ஊழல்’ விவகாரத்தில் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா வலியுறுத்தியிருக்கிறார்.சமீபகாலமாகவே, சித்தராமையா அரசு தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கிவருகிறது. கர்நாடகாவில் தனியார் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை திடீரென்று கொண்டுவந்தது சித்தராமையா அரசு. அதற்கு, தொழில் நிறுவனங்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.எனவே, அந்த மசோதாவை நிறுத்திவைத்துவிட்டார்கள். அடுத்ததாக, ஐ.டி நிறுவன ஊழியர்களுக்கான பணி நேரத்தை 14 மணி நேரமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை சித்தராமையா அரசு மேற்கொண்டுவருகிறது. இது,கர்நாடகாவில்ஐ.டிஊழியர்கள்மத்தியில்கொந்தளிப்பைஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு மத்தியில் எதிர்க்கட்சிகளான பா.ஜ.க-வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் அரசுக்கு எதிராகக் கிளப்பிவருகின்றன. கர்நாடகா அரசுக்கு சொந்தமான ‘வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சிக் கழக‘த்தில் ரூ.187 கோடி முறைகேடாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதுஎன்றவிவகாரத்தைபா.ஜ.க தீவிரமாகக்கிளப்பிவருகிறார்கள்மேலும், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் கையகப்படுத்தியது. அதற்கான மாற்று நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டிவருகிறார்கள். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க-வினர், இது தொடர்பாக கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்தனர்.‘மைசூரு நகர வளர்ச்சி ஆணைய நில ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கர்நாடகா ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தினோம். இதில், முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் விஜயேந்திரா கூறினார்.