கோல்ட்ரிப் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதன்கைது….
இருமல் மருந்து குடிந்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அம்மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கோல்ட்ரிப் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதன் இன்று அதிகாலையில் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை போலீசார் உதவியுடன் அசோக் நகர் வீட்டில் இருந்த ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை 14 குழந்தைகள் அண்மையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் திடீரெனசிறுநீரகசெயலிழப்புஏற்பட்டதேஉயிரிழப்புக்குகாரணம்என்பதுகண்டறியப்பட்டது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய போது, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், ஸ்ரீசன் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து மற்றும் மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட ‘நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.’ மருந்துகள் காரணம் என்பது தெரியவந்தது.குழந்தைகளின் சிறுநீரகத்தை ஆய்வு செய்ததில் திசுவில் ‘டை எத்திலீன் கிளைகால்’ என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்தது தெரியவந்தது. பெயின்ட், மை போன்ற பொருட்கள் தயாரிக்க பயன்படும் ரசாயனம் ஆகும். இந்த ரசாயனம்தான் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்தில் கலந்து இருந்தது தெரியவந்தது.இதையடுத்து, ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை தயாரிக்கும் மருந்து நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய பிரதேச அரசு கடிதம் எழுதியது. அதேபோல், மத்திய பிரதேசம்,பஞ்சாப்,உத்தரப்பிரதேசம்,ஜார்க்கண்ட்,கேரளாஉள்ளிட்டமாநிலங்களில்இந்தமருந்துக்குதடைவிதிக்கப்பட்டது.இதற் கிடையே, இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் கிளை ஆலை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டது தெரியவந்தது. இந்த ஆலைக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். இருமல் மருந்து சாப்பிட்டதில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்த நிலையில், சம்பந்தப்பட்ட இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய மத்திய பிரதேச போலீசார் தமிழகத்திற்கு வந்தனர்.தமிழக போலீசார் உதவியுடன் இன்று அதிகாலை அசோக் நகர் வீட்டில் வைத்து மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.