fbpx
Others

குமரி-சிவாலய ஓட்டத்திற்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்..

குமரியில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்திற்காக தமிழ்நாடுKanyakumari Maha Shivaratri Sivalaya Ottam Preparations | மகாசிவராத்திரி:  குமரியில் நாளை சிவாலய ஓட்டம் தொடங்குகிறது- ஏற்பாடுகள் தீவிரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் மார்த்தாண்டத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு திருமலை 7.45 மணி, திக்குறிச்சி 8.30 மணி,திற்பரப்பு 10 மணி, திருநந்திக்கரை 10.45 மணி, பொன்மனை 11.45 மணி, பன்னிபாகம் மதியம் 12.45 மணி,கல்குளம் 1.30 மணி,மேலாங்கோடு 2 .15 மணி, திருவிடைக்கோடு 2 .45 மணி, திருவிதாங்கோடு3.45 மணி, திருபன்றிகோடு மாலை 5 மணி,திருநட்டாலத்துக்கு 5.30 மணிக்கும் செல்லும்.அங்கிருந்து மார்த்தாண்டத்துக்கு 6 மணிக்கு சென்றடைகிறது. மொத்த பயண தூரம் 103 கி.மீ ஆகும். பயண கட்டணம் ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஒரு பகுதியில் இருந்தோ அல்லது ஊரில் இருந்தோ குறைந்தது 50 பக்தர்கள் சேர்ந்து சிவாலயங்களை தரிசிக்க வேண்டும் என்றாலும் தனியாக அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து வணிக மேலாளர் ஜெரோலின் சிங் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close