Others
இந்திய சுதந்திரபோராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்.
இன்று 5.9.24 ஆம் தேதி இந்திய சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கம்பம் வ.உ.சி.திடலில் உள்ள அவர்தம் திருவுருவச் சிலைக்கு, ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக, தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி அவர்கள் தலைமையில், கிளை இணைச் செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் ஜெகன், பிரகாஷ் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், வ.உ.சி. ஐயாவின் தியாகத்தை போற்றும் வகையில், வ.உ.சி. திடலின் மையப் பகுதியில் வ.உ.சி ஐயாவின் திருவுருவச் சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என் ஆர் சிவாஜி அரசைக் கேட்டுக் கொண்டார்.