Others
அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய கொடை திருவிழா….
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, ஆட்டந்தாங்கல் கிராமம், விஜயா கார்டன் பகுதியில் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய கொடை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஆலய நிர்வாகிகள் முத்துராஜ் நாடார், அகிலன் நாடார், தாளமுத்து நாடார் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாட்டில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.சிறப்புவிருந்தினராக நாடார் பேரவை தலைவர். எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.ஏராளமான நாடார் பெருங்குடி மக்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டார்கள்.