fbpx
Others

செங்குன்றம் போஸ்ட் ஆபீஸ் மாற்றப்படுமா ?

செங்குன்றம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு, வணிக பிரமுகர்களுக்கு, தற்போது செயல்பட்டு வரும் போஸ்ட் ஆபீஸ் மிகுந்த இட நெருக்கடியில் உள்ளது.செங்குன்றம் நெல் மண்டி உள்ள பகுதியில் முதல் மாடியில் செயல்பட்டு வரும் போஸ்ட் ஆபீஸ் முதியோர்கள் உதவித்தொகை வாங்குவதற்கு, மாற்று திறனாளிகள், மகளிர் மற்றும் பயனாளிகள் பணம் செலுத்துவதற்கு,செலுத்திய பணத்தை பெறுவதற்கு மிக,மிக சிரமப்பட்டு வருகிறார்கள்.மேலும் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் அதிகம் உள்ளது செங்குன்றம் பகுதி என்பதால் இங்கு பார்சல் அனுப்புவதற்கு நிறைய பேர் தினமும் வருகிறார்கள்.அவர்களால் மாடியில் ஏறி பொருள்களை அனுப்ப முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.மேலும் போஸ்ட் ஆபீசிலும் பணி புரியும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக மணியார்டர் மற்றும் தபால் பார்சல் டெலிவரி செய்வதும் மிகவும் காலதாமதம் ஆகிறது.எனவே மிகுந்த இட நெருக்கடியில் உள்ள போஸ்ட் ஆபீஸ் வேற இடத்துக்கு மாற்றப்பட வேண்டும்.தரைத்தளத்தில் செயல்பட்டால் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வருவதற்கு எளிதாக இருக்கும் வணிக பிரமுகர்கள் மூலமாகஅனுப்பப்படுகின்றபார்சல்களைஅனுப்புவதற்குஎளிதாகஇருக்கும்என்றுதெரிவிக்கிறார்.

செங்குன்றம்டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் உள்ள பகுதிக்கு அருகே மத்திய அரசு தொலைத் தொடர்பு துறைக்கு சொந்தமான இடம் பெரிய அளவில் இருக்கிறது அந்த இடத்திலேயே புதிய போஸ்ட் ஆபீஸ் கட்டி செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு சிரமம் இருக்காது. போஸ்ட் ஆபீஸ் மூலம் கிடைக்கின்ற வருமானமும் அதிகமாகும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close