fbpx
Others

சித்தராமையா–ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை உத்தரவு…

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். அங்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கோலாகலமாகkarnataka-cm-siddaramaiah-orders-review-of-tamil-nadu-s-ban-on-rss-activities நடைபெற்றது. தலைநகர் பெங்களூரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.அதேபோல், கலபுரகியில் உள்ள ஒரு அரசு பள்ளி கூடத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளும் கலந்து கொண்டனர். அரசு பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.குறிப்பாக ஆளும் காங்கிரஸ் கட்சியே கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அது மட்டும் இன்றி கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதினர்.  இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தடை விதிக்க அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியிருப்பதாக பாஜகவினர் மற்றும்இந்துஅமைப்பினர் குற்றம் சாட்டியதுடன் கடும் கண்டனத்தையும் பதிவு செய்தனர். இதனால் இந்த விவகாரம் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கடிதம் குறித்து விளக்கம் அளித்த பிரியங்க் கார்கே, கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கவே கோரினேன். அந்த அமைப்புக்கு தடை விதிக்ககூறவில்லை என்று கூறினார்.கர்நாடகாவில் அரசு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நடைபெற்றது அரசியல் ரீதியாகவும் விவாதப்பொருளான நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டை பார்த்து அதிகாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாகபாகல்கோட்டையில்செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா கூறியதாவது:-“கர்நாடக ஐடி அமைச்சர் பிரியங்க் கார்கே, மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று எனக்கு கடிதம் எழுதினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது நிகழ்ச்சிகளுக்கு அரசாங்க இடத்தை பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் அந்த அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், கர்நாடகாவிலும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.  பிரியங்க் கார்கேவின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு பின்பற்றும் நடைமுறையை ஆய்வு செய்து கர்நாடக மாநிலத்திலும் அந்த அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கும்படி தலைமை செயலாளருக்கு நான் உத்தரவிட்டு இருக்கிறேன்” என்றார். கர்நாடகாவில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியது பற்றி பேசிய சித்தராமையா, “இதுபோன்ற விவகாரங்களில் எம்.எல்.ஏக்களின் கருத்துகள் மற்றும் உயர்மட்ட குழுவின் முடிவு மிகவும் முக்கியமானது. அமைச்சரவை மாற்றத்திற்கும் அமைச்சர்களுக்கு இரவு உணவு விருந்து வைக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நவம்பரில் எந்த புரட்சியும் இருக்காது” என்று கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close