fbpx
Others

இந்தியாவுக்காக திடீரென அமெரிக்கா மனம் மாறிது…!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!போரை காரணமாக கூறி கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்கு முக்கிய வழித்தடமாக இருக்கக்கூடிய ஹார்முஸ் ஜல சந்தியை மூடிவிட்டது ஈரான். இதன் காரணமாக ஏராளமான கப்பல்கள் வளைகுடா நாடுகளிலேயே சிக்கி இருக்கின்றன. இந்தியாவுக்கு தேவையான 60 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வரவேண்டும். ஆனால் ஈரானின் இந்த செயலால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது.தற்போது இந்தியாவிடம் போதிய அளவிலான கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது. ஆனால் இந்தப் போர் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் எத்தனை நாட்கள் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என்பதை தெளிவாக குறிப்பிட முடியாது. எனவே இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால்பெட்ரோல்,டீசல்விலைஉயர்த்தப்படும் இது கோடிக்கணக்கான சாமானிய மக்களுக்கு நேரடியானபாதிப்பைஏற்படுத்தும்.பெட்ரோல், டீசல் விலை உயரும் பட்சத்தில் பல்வேறு பொருட்களின் விலைகளும் உயரும்.இந்த சூழலில் தான் திடீரென அமெரிக்கா மனம் மாறி இருக்கிறது. இந்தியாவிற்கு ஒரு பெரிய சலுகையை தந்திருக்கிறது. அதாவது எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தற்போதைக்கு கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கு முன்பு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்த அமெரிக்கா தற்போது திடீரென ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்வாங்கிக்கொள்ளஅனுமதிதந்திருப்பதுவிவாதபொருளாகமாறிஇருக்கிறது.அமெரிக்க அமைச்சர் ஸ்காட் பெசண்ட் ஈரானுடன் நடந்து வரும் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாட்டைதவிர்க்கரஷ்யாவிடம்இருந்துஅடுத்த30நாட்களுக்குஇந்தியாகச்சாஎண்ணெய்வாங்கிக்கொள்ளலாம்எனதெரிவித்திருக்கிறார். சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகம் தடையின்றிநடப்பதைஉறுதிசெய்யதற்காலிகமாக இந்த விலக்கினை தருகிறோம் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.இதற்கிடையே ரஷ்யாவும் இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வழங்க முன் வந்திருக்கிறது எனவே இதன் காரணமாக இந்தியாவில் கச்சா எண்ணெய் வரத்து வழக்கம் போலவே நீடித்து பெட்ரோல் டீசல் விலையை உயராமல் பார்த்துக் கொள்ளும் என சொல்லப்படுகிறது.ஹார்முஸ் ஜலசந்தி உலக கச்சா எண்ணெய் விநியோகத்திற்கே மிக முக்கியமான வழித்தடம் ஆகும். ஈரான் இதனை அடைத்து உலகிற்கே பெரும் நெருக்கடியை தந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் எந்த ஒரு கப்பல் நுழைந்தாலும் அதனை தகர்ப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close