fbpx
Others

நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காமல் இருந்தால்–மம்தாஆவேசம்..

 நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காமல் இருந்தால் ஜி.எஸ்.டி செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இது தொடர்பாக ஓராண்டுக்கு முன் பிரதமரை நேரில் சென்று சந்தித்தேன். ஆனால் எந்த பயனும் இதுவரை இல்லை. எங்களின் பாக்கியை எங்களிடம் கொடுங்கள். இல்லையெனில் ஜிஎஸ்டியை ரத்து செய்யுங்கள் என்று கூறினார். மாநிலத்துக்கு சேரவேண்டிய வரி தொகையை நிறுத்தி வைத்து எங்களை மிரட்டாலம்..மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார்கிராம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது  மாநிலத்தின் நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்றால், ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். மேலும் ஒன்றிய அரசு மாநிலங்களின் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் அல்லது ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் கூறினார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம்  வாயிலாக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.  பழங்குடியினரின் நியாமான கோரிக்கைகள் மறுக்கப்பட்டு அவர்களது நிலுவைத்தொகை நிறுத்தப்பட்டால் அவர்கள் தெருக்களில் இறங்கி தர்ணாவில் ஈடுபட வேண்டும் என பழங்குடி மக்களிடத்தில் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பழங்குடியினரை களத்தில் இறங்கி போராட அழைப்பு விடுத்தார். நம்முடைய நிதி நிலுவைத் தொகையைப் பெற ஒன்றிய அரசிடம் அனுமதிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பிய நிலையில் மம்தா பானர்ஜி நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பா.ஜ.க. அரசு ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என்று கூறினார். நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்றால், ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்தி விடுவோம் என்று தெரிவித்துள்ளார்..

Related Articles

Back to top button
Close
Close