fbpx
OthersRETamil Newsதமிழ்நாடு

விராட் கோலி மற்றும் தமன்னா மீது புகார் மனு!

petition filed against virat kohli and Tamannaah

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்யக் கோரியும் அதனை ஆதரிக்கும் வகையில் விளம்பரத்தில் நடிக்கும் இந்தியா கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு மொபைல் பிரிமியர் லீக் என்ற ஆன்லைன் தளம் மூலம் ரம்மி மற்றும் முப்பத்திற்கு மேற்பட்ட சூதாட்டங்கள் அறிமுகமாகி நடந்து வருகின்றது. இந்த சூதாட்டம் மக்கள் மத்தியில் பிரபலமாகி, தினமும் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் என நம்பி அதிக அளவில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் வயதான பெரியவர்கள் என அனைவரும் விளையாடி வருகின்றனர்.

இதன் மூலம் பலர் இந்த விளையாட்டுகளில் முதலீடு செய்து ஏமாறுகின்றனர். இதன் விளைவாக பொருளாதாரத்தை இழந்து பலர் மனநலம் பாதிக்கப்பட்டு தங்களின் தொழிலைளையும் பொருளாதாரத்தையும் இழக்கின்றனர். மூன்று நாட்களுக்கு முன்பு இந்த சூதாட்டத்தில் பணத்தை இழந்த சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த ஆன்லைன் கேம்களுக்கு உறுதுணையாக அதனை விளம்பரம் செய்யும் விராட் கோலி மற்றும் தமன்னா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வைகுண்டர் மக்கள் கட்சி சார்பில் ஆன்லைன் மூலமாக மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close