OthersTamil Newsஅரசியல்உலகம்
கொரோனாவில் இருந்து குணமான அமைச்சர்…! ஆனாலும் துரத்திய மரணம்…!
Pakistan minister dead

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கொரோனாவில் இருந்து குணமான அமைச்சர் திடீர் என இறக்க பாகிஸ்தான் அதிர்ந்து போய் இருக்கிறது.
பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் முனிர் கான் ஒரக்ஜாய். 61 வயதாகும் அவர் தேர்தலில் ஜமியாத் உலிமா இ இஸ்லாம் ஃபாஜல் என்ற மத ரீதியான கட்சி சார்பாக வென்றவர்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தொடரின் போது முனிர் கான் திடீரென மயங்கி விழுந்தார். இந்நிலையில் தனது வீட்டிலிருந்தபோது அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட, அவரின் குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார். அமைச்சர் உயிரிழப்பை அவரது குடும்பத்தார் உறுதி செய்தனர். அண்மையில் தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.