தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை வாய்ப்பு : மே,28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள தோட்டக்காரர், காவலர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 23
பணி: தோட்ட பராமரிப்பாளர் – 13
பணி: வாட்ச்மேன் – 10
தகுதி: குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: சுற்றுலா ஆணையர், சுற்றுலா ஆணையரகம், தமிழ்நாடு சுற்றுலா வளாகம், எண்.2, வாலாஜா சாலை, சென்னை 600002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018
மேலும், விண்ணப்ப மாதிரி, வயதுவரம்பு சலுகை, சம்பளம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadutourism.org/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து அறிந்துகொள்ளவும். அதிலேயே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தி, பூர்த்தி செய்து விண்ணப்பித்திட வேண்டும்.