fbpx
Others

தேனி-ஆண்டிபட்டி-புதிதாக நீதிமன்றம் கட்டி தரக்கோரிஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் புதிதாக நீதிமன்றம் கட்டி தரக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பேசும் போது, ஆண்டிபட்டியில் நீண்ட காலமாக நீதிமன்றம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதனால் பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு வந்து செல்லவும் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வாகனங்களை நிறுத்தவும் ,போதிய இடமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இங்கு நிலையான சொந்த கட்டிடத்தில் நீதிமன்றம் ஏற்படுத்த தர வேண்டுமென தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் எம்.கே.எம். முத்துராமலிங்கம், சட்ட மன்ற உறுப்பினர் மகாராஜன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் ஆசையன் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு வலியுறுத்தினார்கள். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளவழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்…
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் 25/07/2023 இன்று மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தின் நிகழ்வு.……….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close