அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை…
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் வாழ்வாதாரமாக விளங்கும் கார்க் தீவு மீது ஏற்கனவே கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்திய நிலையில், அந்த தீவை மீண்டும் தாக்குவோம் என ட்ரம்ப்எச்சரிக்கைவிடுத்துள்ளார். இந்நிலையில், அந்த தீவு மீண்டும் தாக்கப்பட்டால், தாக்குதல் எங்கிருந்து நடத்தப்பட்டதோ அந்த இடம் சாம்பலாக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதுஈரான் மீது, பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதற்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவிற்கு தங்கள் ராணுவ தளங்களை வழங்கி உதவிவரும் அரபு நாடுகள் மீது கடும் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது.இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. அந்த வழியாக செல்லும் எதிரி நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது. இதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை ஈரான் பிடியிலிருந்து விடுவிக்க, ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது தோல்வியிலேயே முடிந்தது.இதைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய எண்ணெய் சேமிப்பு மற்றும் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது, கடந்த 13-ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் அறிவித்தார். அந்த தீவில் உள்ளராணுவ கட்டமைப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.அதோடு, அங்குள்ள எண்ணெய் கிணறுகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளை, மனிதாபிமான அடிப்படையில் தாக்காமல் விட்டுவிட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஹார்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து முடக்கினால், கார்க் தீவில் உள்ள எண்ணெய்க் கிணறுகள் மற்றும்
சேமிப்புக் கிடங்குகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்றும், அதை ஜாலிக்காகக் கூட நடத்துவோம்என்றும்ட்ரம்ப்எச்சரிக்கைவிடுத்திருந்தார்.ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு பதில் எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான் ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் அபுல்பாஸ்ல்ஷெகர்ச்சி,ஈரானின்எண்ணெய்அல்லதுஎரிசக்தித்துறைமீதுஏதேனும்தாக்குதல்நடத்தினால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.மேலும், கார்க் தீவை அமெரிகா மீண்டும் தாக்கினால், அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும், அது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதோடு, எந்த இடத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்படுகிறதோ, அந்த இடத்தை சாம்பலாக்கிவிடுவோம் என்றும், அந்த நாட்டில் உள்ள அனைத்து எண்ணெய்மற்றும்எரிவாயுகிடங்குகள்மீதும்தாக்குதல்நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.அமெரிக்காவிற்கு ஒத்துழைக்கும் அல்லது அமெரிக்க முதலீடுகளைக்கொண்ட மேற்காசியநாடுகளுக்கும்அவர்எச்சரிக்கைவிடுப்பதாகஷெகர்ச்சிதெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவை தங்கள் மண்ணில் இருந்து ஈரானை தாக்க அனுமதித்தால், அந்த நாடுகளின் எரிசக்தித்துறையும்இலக்காகமாற்றப்படும்என்றும்அவர்கடும்எச்சரிக்கையைவிடுத்துள்ளார்.இதையடுத்து, ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்து என்ன செய்வார் என்றும், அவர்களுக்கு தளங்களை வழங்கி வரும் அண்டை நாடுகள் என்ன செய்யும் என்றும் கேள்விகள்எழுந்துள்ளன.ஒருவேளை தாக்குதல்கள் தொடர்ந்தால், உலகம் முழுவதும் கச்சாஎண்ணெய்கிடைக்காமல்,எரிவாயுமற்றும்பெட்ரேல்,டீசல்தட்டுப்பாடுதலைவிரித்தாடும் என்பது உறுதி..