தமிழ்நாடுசட்டமன்றத்திற்கான தேர்தல் தேதிஅறிவிப்பு….
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு
மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று தலைமைதேர்தல்ஆணையர்ஞானேஷ்குமார்தமிழ்நாடுசட்டமன்றத்திற்கான தேர்தல் தேதியை அறிவித்தார்.அதன்படி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாளாக ஏப்ரல் 6ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 7ம் தேதி வேட்புமனுக்களை பரிசீலனை செய்யப்படும் என்றும் ஏப்ரல் 9ம் தேதி வேட்புமனு திரும்பப் பெற இறுதி நாள் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை வாக்குப்பதிவு நடந்த பின் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. சரியாகச் சொல்வதென்றால் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில் மே 2ம் தேதி வாக்குஎண்ணிக்கைநடைபெற்றது.இரண்டுக்கும் இடைவெளி 26 நாட்கள் இருந்தது.ஆனால் இப்போது அதற்கு மாற்றாக வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு வார இடைவெளியே இருக்கிறது. வருகிற ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பின் சரியாக 10 நாட்களுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.