fbpx
Others

இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்….!

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம் .. வானில் தோன்றும் ரத்த நிலவு - எப்போது பார்க்கலாம்?இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இன்று (மார்ச் 3) மாலை நிகழ உள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது. அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது. இதனால்சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர்.இந்தியாவில் சந்திரன் உதிக்கும் போதே கிரகணம்தொடங்கி விடுவதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிரகணத்தின் இறுதிநிலையை  மட்டுமே காண முடியும்.மாலை 4:58 மணிக்கு தொடங்கும் நிழல் கிரகணம் முழு கிரகணமாக மாறும். மாலை 5:32 க்கு முழு கிரகணம் முடிவுக்கு வரும். இரவு 7:53 மணிக்குகிரகணம்முழுவதுமாக முடிவுக்குவரும்.இந்தியாவின்பெரும்பாலானபகுதிகளில்சந்திரன்உதிக்கும்போதுஇந்தநிகழ்வுகிழக்குஅடிவானத்தில் தாழ்வாக தெரியும்.வடகிழக்கு மாநிலங்கள், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் சந்திரன் சீக்கிரமேஉதயமாகும் என்பதால் அங்கு முழுகிரகணத்தையும் காண முடியும். இங்கு மாலை 5:10 முதல் 5:25 மணிக்குள் கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையைத் தெளிவாகக் காணலாம்.சென்னை, பெங்களூரு, மும்பை,டெல்லி போன்ற நகரங்களில் மாலை 6:20 முதல் 6:30 மணிக்குள் ஓரளவு கிரகணம் தெரியும்.சூரிய கிரகணத்தைப் போலன்றி, சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இதற்குச் சிறப்பு கண்ணாடிகள் தேவையில்லை.


Related Articles

Back to top button
Close
Close