fbpx
Others

பழைய வால்பாறை குடியிருப்பு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ..பொதுமக்கள்அதிர்ச்சி..!

 

Valparai அருகே மீண்டும் காட்டு தீ – பொதுமக்கள் அவதி, மர்ம நபர்கள் மீது சந்தேகம்..?
வால்பாறை அடுத்துள்ள பழைய வால்பாறை குடியிருப்பு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும்அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. வறண்ட புல் மற்றும் காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவி, அருகிலுள்ள குடியிருப்புகள் முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்தது.வீடுகளுக்குள் புகை புகுந்ததால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற சிரமங்களை சந்தித்தனர். சிலர் பாதுகாப்பு காரணமாக தற்காலிகமாக வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பிடத்தக்க வகையில், கடந்த மாதம் ரொட்டி கடை பகுதியில் இதேபோல் காட்டு தீ ஏற்பட்டிருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதால், மர்ம நபர்கள் தீவைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இந்த பகுதியில் அதிக அளவில் வனத்துறைஊழியர்கள்பணியாற்றி  வந்தாலும்,இத்தகையதீவிபத்துகளைமுழுமையாகதடுக்கமுடியாதநிலைஇருப்பதாகபொது  மக்கள்குற்றம்சாட்டுகின்றனர்.சம்பவம்குறித்துதகவல்அறிந்தபழையவால்பாறைஎஸ்டேட்தொழிலாளர்களும்அந்தஅதிகாரிகளும்தீயைகட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ ஏற்பட்டதற்கான உண்மை காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாவட்ட புகைபடகலைஞர் ஜெயப்ரகாஷ் தே

Related Articles

Back to top button
Close
Close