fbpx
Others

தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரம் முட்டுக்கட்டை—- ராகுல் காந்தி

congressதொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையினால், ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் கைகோர்க்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்ட வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது.கடந்த 2021 தேர்தலைப் போலவே இந்த முறையும் குறைந்த அளவிலான தொகுதிகளையே காங்கிரஸிற்கு ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் இந்த முறை 40-க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும்தமிழகஅமைச்சரவையில்பங்கு(ஆட்சியில்பங்கு)எனப்பிடிவாதம்காட்டப்படுகிறது.  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு அவசியமில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதோடு, பிப்ரவரி 22-ஆம் தேதிக்குப் பிறகே தொகுதிப் பங்கீட்டுக் குழு அமைக்கப்படும் என்று தள்ளிப்போட்டு வருகிறார். பீகார் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல்களில் கடைசி நேரத்தில் முடிவெடுத்ததால் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்ததைச் சுட்டிக்காட்டும் காங்கிரஸ் மேலிடம், இந்த காலதாமதத்தால் கடும் கோபத்தில் உள்ளது.திமுகவின் இந்த “பிடிவாதப் போக்கினால்” அதிருப்தியடைந்த ராகுல் காந்தி, தமிழகத்தில் ஒரு மாற்றாகத் தென்படும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். சமீபத்தில் ராகுல் காந்திக்கும் விஜய்க்கும் இடையே தொலைபேசி வாயிலாக உரையாடல் நடந்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இனி மீண்டும் போன் செய்து கூட்டணி பற்றி பேச வாய்ப்புள்ளதாகcongress கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே காங்கிரஸை ஒரு இயற்கையான கூட்டாளி (Natural Ally) என்று வர்ணித்துள்ளது. இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்கு வங்கியைப் பெற்றுள்ள விஜய்யுடன் காங்கிரஸ் கைகோர்த்தால், அது திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என ராகுல் காந்தி கருதுவதாகக் கூறப்படுகிறது.தற்போது வரை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது, ராகுல் காந்தியை சகோதரர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி வந்தாலும், கள நிலவரம் வேறாக உள்ளது. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.ஒருவேளை பிப்ரவரி இறுதியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் திமுக தனது நிலையில் இருந்து இறங்கி வராவிட்டால், காங்கிரஸ் தனது நீண்டகாலத் தோழமையை முறித்துக்கொண்டு, விஜய்யுடன் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கும் சூழல் உருவாகலாம். அப்படி நடந்தால், 2026 தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஸ்டாலினின் பிரதர் ராகுல் காந்தி அந்த முடிவை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Related Articles

Back to top button
Close
Close