இன்று தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு….
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடக்கிறது. இதற்காக 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. . மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன் போன்ற வாகனங்களை நிறுத்த தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் திரும்பியதிசையெங்கும் தே.மு.தி.க. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டி
அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பாசார் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டு திடலுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வருகை தருகிறார். பின்னர் அவர், கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து 3.23மணிக்குபரதநாட்டியம்,விஜயகாந்த்பற்றியகதை,3.40மணிக்குபட்டிமன்றம்,மாலை4.40மணிக்குகலைக்குழுவினரின்நடனம்,பரதநாட்டியம்விஜயகாந்த்பற்றியகதை,3.40மணிக்குபட்டிமன்றம்,மாலை4.40மணிக்குகலைக்குழுவினரின்நடனம்,பரதநாட்டியகுழுவினரின்நிகழ்ச்சி,கிராமியகலைக்குழுநிகழ்ச்சிநடக்கிறது.இதையடுத்துமாலை6மணிஅளவில்மாநாடுதொடங்கிநடக்கிறது.இதற்குபிரேமலதாவிஜயகாந்த்தலைமைதாங்கிசிறப்புரையாற்றுகிறார்.அப்போதுஅவர்சட்டமன்றதேர்தல்தொடர்பாகபலமுக்கியஅறிவிப்புகளைஅறிவிப்பார்எனகட்சியின்மூத்தநிர்வாகிகள்தெரிவித்தனர்.மேலும் சட்டசபை தேர்தலில் யாருடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்பதை மாநாட்டில் தெரிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவேதெரிவித்துஇருந்தார்.அதன்படி இன்று நடைபெறும் மாநாட்டில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை அவர் அறிவிக்க இருக்கிறார்.இதனால் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.