fbpx
Others

விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடித்துமலர்தூவி அஞ்சலி செலுத்தினர்…

2-ம் ஆண்டு நினைவு தினம்: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர்பொன்.ராதாகிருஷ்ணன்விஜயகாந்த்  நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கருநாகராஜன், நடிகைகஸ்தூரி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.விஜயகாந்த்நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Related Articles

Back to top button
Close
Close