பாஜக கூட்டணி இறுதி முடிவைஅறிவிக்க,அமித் ஷா தமிழ்நாடு வருகை 15 / 12 / 25…

அமித் ஷா வருகிற 15-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஆனால், அவர் வருவதற்கான சிக்னல்கள் இப்போதே தமிழ்நாட்டில் தெரிகிறது.தற்போது தமிழ்நாட்டின் முன்னாள்முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்அறிவிப்புஒன்றைவெளியிட்டுள்ளார்.டிசம்பர் 15-ம் தேதியில் தான், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் கூட்டம் நடக்கும் எனவும் அதில் இறுதி முடிவை அறிவிப்பதாக முன்னர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.இந்த நிலையில், அமித் ஷா தமிழ்நாடு வருகை அறிவிப்புவெளியானது.தற்போதுஓ.பன்னீர்செல்வம் கூட்டத்துக்கான தேதியைத் தள்ளி வைத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.அதிமுகவில் மீண்டும் இணைய ஓ.பன்னீர்செல்வம் எடுக்காத முயற்சிகளே இல்லை. பாஜக மேலிடமும் கே.பழனிசாமியிடம் பேசிபார்த்தது.ஆனால்,அவர்கொஞ்சம்கூடஅசைந்துகொடுப்பதாகஇல்லை.ஒருகட்டத்தில்(கடந்தஜூலைமாதம்)பன்னீர்செல்வம்பாஜகவின்கூட்டணியில்இருந்துவிலகிவிட்டார்.இருந்தாலும், இந்த மாதத் தொடக்கத்தில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்து வந்தார்அவர்.கடந்த7தேதி,கோவையில்தமிழ்நாடுபாஜகமுன்னாள்தலைவர்அண்ணாமலையைசந்தித்தும்பேசினார்.இந்தநிலையில்தான்கூட்டம்ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாடு வரும் அமித் ஷா தனக்கு எதாவது பாசிட்டிவ் சிக்னல் காட்டினாலும்காட்டலாம்என்கிறபன்னீர்செல்வம்எண்ணத்தின்விளைவேஇறுதிமுடிவுதேதியின்ஒத்திவைப்புஎன்கிறார்கள்சிலஅரசியல்பார்வையாளர்கள்.சிலமாதங்களாக,ஓ.பன்னீர்செல்வமும்,அமமுகபொதுச்செயலாளர்டி.டி.வி.தினகரனும்நெருக்கம்காட்டிவருகின்றனர்.இடையில்செங்கோட்டையனும்இவர்களுடன்இணைந்திருந்தார். ஆனால், அவர் இப்போது தவெகவில் இணைந்துவிட்டார்.டி.டி.வி.தினகரனும்தவெகதலைவர்விஜய்க்குஆதரவாகபேசிவருகிறார். இன்னொருபக்கம்,பாஜகஓ.பன்னீர்செல்வத்தை விட்டுதர தயாராக இல்லை என்றே சொல்லலாம். இதற்கு டெல்லியில் ஃபிக்ஸான அமித் ஷா சந்திப்பும், கடந்த வாரம் நடந்த அண்ணாமலை சந்திப்பும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருக்கிறார். அமித் ஷாவை சந்திக்க உள்ளார். அவர்கள் இருவரும் கூட்டணி குறித்து பேச உள்ளதாக பாஜக தரப்பு கூறுகிறது.’மெகா கூட்டணி’ என்கிற பெயரில் தான் அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியது. ஆனால், அந்தக் கூட்டணியில்அந்தஇருகட்சிகளைத்தவிரவேறஎந்தக்கட்சியும்இதுவரைஇடம்பெறவில்லை. தென் மாவட்டங்களில் இந்தக் கூட்டணியைக் கொண்டு சேர்க்க ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆதரவு தேவை என்று பாஜக நினைக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்வதாக இல்லை.அதனால், ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் பீகார் ஃபார்முலாவைக் கையிலெடுக்கலாம் பாஜக.அதாவது, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க சொல்லாமல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அவரை சேர்த்துகொள்ள நினைக்கிறது.இதை பாஜகசெய்யும்என்றுநினைத்துதான்பன்னீர்செல்வமும்தனதுமுடிவைஒத்திவைத்திருக்கிறார்.ஒருவேளை அப்படி எதுவும் நடக்காமல் போனால், அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்தப் பேச்சு அவர் டெல்லி சென்ற போதே எழுந்தது.தனிக்கட்சி ஆரம்பித்து, விஜய்யுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட திட்டமும் அவர் வசம் இருந்ததாக சொல்லப்பட்டது.