fbpx
Others

பிரதமர் மோடி–78,000 கோடி ரூபாய் உரிமைக் கோரப்படாத பணம் இருக்கிறது….

அதிகாலையே சர்ப்ரைஸ்.. பலரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.5000.. யாருக்கெல்லாம் ஜாக்பாட்புது டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார், அப்போது அவர் பேசும் போது, நாட்டின் மொத்த வங்கிக் கணக்குகளில் சுமார் ₹78,000 கோடி ரூபாய் அளவுக்கு உரிமைக் கோரப்படாத பணம் இருக்கிறது, ஆனால் அந்தப் பணத்திற்கு உரியவர்கள் என்று யாரும் வந்து என் பணம் என்று முறையாக உரிமை கோரவில்லை.. அவர்கள் இதுவரை திரும்பப் பெறவில்லை, இந்த பணத்தில் கணிசமான பகுதி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பாக இருக்கலாம். அது அப்படியே இருக்கிறது. எனவே அவர்களை தேடிக் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக, நாடு முழுவதும் குறைந்தது 500 மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதேபோல் காப்பீட்டு நிறுவனங்களில் ₹14,000 கோடி மற்றும் டிவிடெண்டுகளில் ₹9,000 கோடி பணத்திற்கும் உரிமை கோரப்படவில்லை. இந்தப் பணம் அனைத்துக்கும் எந்த உரிமையாளரும் இல்லை” என்று கூறினார். வங்கிக் கணக்கில் இருக்கும் ஒரு தொகையானது, தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக எந்தவொரு செயல்பாட்டிலும் இல்லாமல் இருந்தால், அந்தத் தொகை உரிமை கோரப்படாத பணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கின் உரிமையாளர் இறந்துவிட்டாலோ, முகவரி மாறிவிட்டாலோ, அல்லது கணக்கு வைத்திருப்பவரைப் பற்றிய தகவல் வங்கிக்குத் தெரியாமல் போனாலோ இந்த நிலை ஏற்படுகிறது.இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிகளின்படி, உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தத் தொகை அனைத்தும், அனைத்து வங்கிகளிலிருந்தும் எடுக்கப்பட்டு, கல்வியாளர் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு நிதி என்ற நிதிக்கு மாற்றப்படுகின்றன. இந்த நிதியைப் பெரும்பாலும் ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது. இந்த நிதியைப் பயன்படுத்தி RBI, வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நிதி தொடர்பான கல்வியை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.தற்போது 78,000 கோடி உரிமைக் கோரப்படாத பணத்தைத் திரும்பவும் அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் அல்லது வாரிசுகளிடம் சேர்க்கவும் மத்திய அரசு விரும்புகிறது. அதற்காகவே பிரதமர் மோடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இந்தப் பணத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகவே இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு UDBHAV அதாவது Unclaimed Deposits – Gateway to Access Informationஎன்றுபெயரிடப்பட்டுள்ளதுமக்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி, தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் பெயரில் ஏதேனும் உரிமை கோரப்படாத பணம் உள்ளதா என்று தேடி அறிந்து, அதனை மீட்டெடுக்க முடியும். அதேபோல் இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டின் மையக்கருவான – “நாளை மாற்றியமைத்தல்” என்ற தலைப்பைப் பற்றி மோடி பேசுகையில், அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கத்திற்கான இந்திய மாதிரி, இந்தியா தற்போது அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கத்திற்கான ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது என்று தெரிவித்தார். அவர் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை ஒரு ‘வலுவான பேரியப் பொருளாதாரச் சின்னமாக’ பாராட்டினார். இப்போதைய புள்ளிவிவரம், இந்தியா இன்று உலகப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய வளர்ச்சிக் காரணியாக எழுச்சி பெற்றுள்ளது என்பதை உணர்த்துகிறது என்றும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close