fbpx
Others

காந்தி ஜெயந்தி முன்னிட்டு“நம்ம ஆவடி“ என்ற தலைப்பில் மராத்தான்….

சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி சேப்பா கராத்தே அகாடமி சார்பாக “நம்ம ஆவடி“ என்ற தலைப்பில் மராத்தான் நடந்தது.காந்தி ஜெயந்தி முன்னிட்டு சேப்பா அகாடமி நிறுவன செயலாளர். சங்கீதா நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆவடி காவல் உதவி ஆணையர். இ. கனகராஜ் கலந்து கொண்டு போட்டியைகொடியசைத்து துவக்கி வைத்தார்.ஆவடி ஓ. சி. எஸ் சாலையில் துவங்கி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு வெள்ளானூர் அரசு பள்ளியில் முடிவடைந்தது.இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.அனைவருக்கும்சான்றிதழ்களும்கோப்பைகளும்வழங்கிகௌரவிக்கப்பட்டது.தற்போது தமிழகத்தில் போதைபழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்கும் வகையில் விழிப்புணர்வுஏற்படுத்தி அவர்களை பல்வேறு சாதனைகளைப் படைக்க வைக்கும் பல்வேறு பயிற்சிகளில் மாரத்தானும் ஒன்று என்று அகாடமி செயலாளர். சங்கீதா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திரளாக மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் காவல்துறையினரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close