மாதவரம்– தேசிய சாலை பாதுகாப்பு மாதம்…

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் வடக்கு மண்டலம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மாதவரம் தனியார் பெண்கள் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் லீமா ரொசாரியோ தலைமை வகித்தார். சென்னை வடக்குமண்டலபோக்குவரத்துகாவல்இணைஆணையர். மகேஷ்குமார் ஐ.பி.எஸ், போக்குவரத்து துணை ஆணையர் விஷ்வேஷ் பிசாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டு போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது, பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்டுவது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .போக்குவரத்து தொடர்பான வினா , விடை போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். உதவி ஆணையர் சத்தியமூர்த்தி, ஆய்வாளர்கள் சக்திவேல், சுடலைமணி, உதவிஆய்வாளர்கள் அய்யனார், மகேந்திரன் ,மாடசாமி மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் அன்னம்மாள் அற்புதமேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.