திமுக ஆட்சியில் குற்றம் அதிகரிப்பு : அண்ணாமலை : தடையை மீறி போராட்டம்
திமுக ஆட்சிக்கு வந்தபின் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை குறை கூறியுள்ளார். தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ₹44,042 கோடி எங்கு சென்றது என கேள்வி எழுப்பிய அவர், திமுக மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி எம்.பிக்கள் வரை தனியார் பள்ளிகளை நடத்துகின்றனர். எனவே,அரசுப்பள்ளிகளின்நிலைகுறித்துவெள்ளைஅறிக்கைவெளியிடவேண்டும்எனவும்வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலை.விவகாரத்தில் போராட்டம் நடத்த முயன்றதால் கைதான சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இதன்பின் பேசிய செளமியா, மாநிலத்தில் பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன; பெண்கள் பயத்துடன் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், பெண்களுக்கு அரசு கொடுக்கும் ₹1000 வேண்டாம்; பாதுகாப்புதான் வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தினால்கூட அரசு கைது செய்கிறது என்றார் .அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில் நாளை மதுரையில் ‘நீதி கேட்பு பேரணி’ நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பேரணிக்கு போலீசார் அனுமதிகொடுக்கவில்லை. இந்நிலையில், திட்டமிட்டபடி நாளை மதுரையில் நீதி கேட்பு பேரணி நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். போலீசார் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.