பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு…….
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்கள்பாசனவசதிபெற்றுவருகின்றன.இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனினும் தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,642கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 98.53 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400கனஅடி, கீழ்பவாnனி வாய்க்கால் பாசனத்திற்கு 0.0 கனஅடி என மொத்தம் 5,00கனஅடி தண்ணீர் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்
ஈரோடு -திம்பத்தில் சிறுத்தை நடமாட்டம் வாகன ஓட்டிகள் பீதி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், வன கோட்டத்திற்கு உட்பட்ட, திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது . மலைப்பாதை வழியாக வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென சிறுத்தை புலி ஒன்று, ரோட்டை கடந்து, வனத்துக்குள் ஓடிச் சென்று மறைந்தது. சிறுத்தை புலியை பார்த்தவுடன் மிரண்டு போன வாகன ஓட்டிகள், மொபைல் ஃபோன்களில், ஃபோட்டோ பிடித்தனர். இதுபற்றிய தகவல் பரவியதால், திம்பம் மலைப்பாதை வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பீதியடைந்துள்ளனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் 13/12/2024 நிலவரம் :விலை கிலோ1க்கு
மல்லிகை :1200/2260 முல்லை :680/1020 காக்கடா :500/775 செண்டு :10/80
கோழி கொண்டை:60/140 ஜாதி முல்லை:750 கனகாம்பரம்:400 அரளி :320 துளசி :50
செவ்வந்தி :200/220 மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்
புளியம்பட்டி கால்நடை சந்தையில் மாடுகள் விலை உயர்வு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை நேற்று நடந்தது. பரவலாக மழை பெய்துள் ளதால், தீவன பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனால் கால்நடைகளை வாங்க, விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.சந்தைக்கு, 10 எருமை, 200 கலப்பின மாடுகள், 80 கன்றுகள், 220 ஜெர்சி மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. எருமை, 20-32 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 22-43 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 23-49 ஆயிரம், சிந்து, 20-44 ஆயிரம், நாட்டுமாடு, 40-76 ஆயிரம் ரூபாய் வரை, விற்றது. வளர்ப்பு கன்றுகள் 6,000 முதல், 15 ஆயிரம் வரையும் விற்பனையானது. கர்நாடக, கேரளா மாநில வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச்சென்றனர்.அதேபோல், 200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 10 கிலோ வெள்ளாடு, 7,000 ரூபாய் வரை, 10 கிலோ செம்மறி ஆடு, 6,500 ரூபாய் வரை விற்பனையானது. மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்