fbpx
Others

பிரதமர் மோடி- ஜி-20 உச்சிமாநாட்டில்பங்கேற்க பிரேசில்செல்கிறார்.

பிரதமர் மோடி ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு ஐந்து நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேற்கண்ட நாடுகளுடன் கயானா, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறார். பிரதமர் மோடியின் பயணம் வரும் 16ம் தேதி தொடங்கி 21ம் தேதி முடிவடையும். இந்தப் பயணத்தின் தொடக்கத்தில், ஆப்பிரிக்க நாடானநைஜீரியாவுக்குசெல்கிறார்.ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரம் மற்றும் அதிகமக்கள்தொகைகொண்டநாடானநைஜீரியாவிலிருந்து இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகஉள்ளது. தொடர்ந்து வரும் 17 முதல் 19ம் தேதி வரை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கடந்தாண்டு, ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்பட்ட போது, அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி இருந்தார். மாநாடு முடிந்தவுடன் பிரேசில் அதிபர் லூயிஸ்இனாசியோலூலாடாசில்வாவிடம்,ஜி20மாநாட்டின்பொறுப்புஒப்படைக்கப்பட்டது.   வரும் 19 முதல் 21ம் தேதி வரை கயானாவில் இருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இர்ஃபான் அலியை சந்திக்கிறார். பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் கயானாவுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் போடவுள்ளது. அப்போது இந்தியா-கரீபியன் உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார். கயானாவின் அதிபர் அலி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸின் தலைமை விருந்தினராக அவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close