சட்டபேரவைநேரலை எடிட் தவரானது.. உதயநிதி
சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதல்வர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.”கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதல்வர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு” என அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுச் சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.நேற்றைய தினம் (19.06.2026) மேகேதாட்டு அணை கட்டுவதைக் கண்டித்து முதல்வர் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன. அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில், அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர்உரைமீதானவிவாதம்நேரலைசெய்யப்படவில்லை. இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானதுஆகும்.மக்கள்பிரதிநிதிகளின் குரலை மறைப்பது ஆகும். சட்டப்பேரவைமாண்பைக்குலைப்பதாகும்.நேரலைநிறுத்தப்பட்டது மிகப் பெரிய தவறு என்றால், அதைவிடப் பெரிய தவறு பின்னர் இழைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின்விவாதங்கள்முற்றிலும்இருட்டடிப்புச்செய்யப்பட்டு,ஆளுங்கட்சியினருக்குவேண்டியவிவாதவீடியோக்கள்மட்டும்எடிட்செய்யப்பட்டுமாலையில்வெளியிடப்பட்டுள்ளன. பேச்சுரிமையை, அதிலும் குறிப்பாகச் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவைக்குள் இருக்கும்பேச்சுரிமையை நகக்கும் செயலாகும். இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கு உகந்தது இல்லை.’மாற்றம்’ என்ற சொல்லை மையமாக வைத்துத் தேர்தலைச் சந்தித்தவர்கள்,சட்டப்பேரவைஉறுப்பினர்களின்குரலைநசுக்குவதுதான் அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றமா? மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்துவது ஆகும்இந்த அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட முதல்வர் பலமுறை பேசிய நிலையில், இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம். மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்க மறுப்பதும், அரைகுறைச் செய்திகளை அளிப்பதும், “நாங்கள் தருவதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்” என்று சொல்வதும் பாசிசநடவடிக்கைகள்ஆகும்.ஒரேநேரத்தில் சட்டப்பேரவை, மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் அவமானப்படுத்தும் செயல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறேன். வரும் திங்கட்கிழமையன்று (22.06.2026) எதிர்க்கட்சித் தலைவரான நானும், பிறதலைவர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் உரையாற்ற உள்ளதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நேரலை செய்வதற்குத்தங்களுக்குஉள்ளபேரவைத்தலைவர்அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இல்லாவிட்டால் சட்டப்பேரவை கூடுவதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்; மக்கள் அளித்த வாக்குக்கே மரியாதை இல்லாமல்போய்விடும்.சட்டப்பேரவையையும்சட்டப்பேரவைஉறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் இதுபோன்ற செயல்களை இனியும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.