fbpx
Others

வடகரை ஊராட்சியில்முன்னாள் மாணவர்கள் பள்ளி ஆண்டு விழா…

மாதவரம் தொகுதி வடகரை ஊராட்சியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிட நல ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில்  2006-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில் பள்ளி ஆண்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணன்குட்டி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பூவராகன் அனைவரையும் வரவேற்றார்.  விழாவில் பள்ளி மாணவர்களின் நடனம், நாடகம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில். தலைவர். பி.எஸ்.அமல்ராஜ், முன்னாள் புழல் ஒன்றியகுழுபெருந்தலைவர்தங்கமணிதிருமால், முன்னாள் புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர். தமிழ்செல்வி ரமேஷ், சென்னை மாநில கல்லூரி பேராசிரியர் முனைவர் குமார், செங்குன்றம் சரக காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில்  லாசர்ஸ் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close