fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

2019-2020 வருடத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்!

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டைதாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் பேசி வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த ஜனவரி 2ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நடைப்பெற்றது.

பின்னர், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடந்தது.

ஜனவரி 8ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.

தொடர்ந்து இன்று பிப்ரவரி 8ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து ஓபிஎஸ் தொடர்ந்து பேசி வருகிறார்.

Related Articles

Back to top button
Close
Close