108ஆம்புலன்ஸ் சேவை வேலைவாய்ப்பு முகாம் !!!
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
108 ஆம்புலன்ஸ் சேவையை அளிக்கும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் இந்த வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் இம்முகாம் நடைபெறும்.
பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, டிஎம்எல்டி அல்லது அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்பு படித்த, 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இரு பாலரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
இந்தப் பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு ஆகியவையும் உண்டு.
24 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் இலகுரக ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், உயரம் 162.5 செ.மீ.க்கும் குறையாமல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 73388 93080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் .