fbpx
ChennaiOthersRETamil Newsதமிழ்நாடு

தமிழகம் வந்த ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்…! வேகமெடுக்கும் கொரோனா சோதனை!

1 lakh PCR Kit came to tamilnadu

சென்னை;

தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் சோதனைக் கருவிகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கி தற்போது ரஷ்யாவை முந்தி மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் அதிகமாக பாதிப்புகளை சந்தித்த இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1.11 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் அதிகளவிலான சோதனைகள் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சோதனைகளுக்காக 10 லட்சம் பிசிஆர் சோதனைகள் கருவிகள் தமிழகம் வாங்க முடிவு செய்தது.

அதற்காக தென் கொரியாவில் 7 லட்சம் கருவிகள் ஆர்டர் செய்த நிலையில் முதல் கட்டமாக ஒரு லட்சம் கருவிகள் நேற்று தமிழகம் வந்தன. இதையடுத்து இன்று முதல் சோதனைகள் செய்வது அதிகரிக்கும் என தெரிகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close