ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்….
கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை, இன்று (நவம்பர் 28) புனித பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள்நடைபெற்றது. இந்தசிலையைபிரதமர்மோடிதிறந்துவைத்தார்.நொய்டாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி ராம் சுதாரின் வழிகாட்டுதலின்கீழ்இந்தராமர்சிலைவடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க் கார்டனையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவை முன்னிட்டு பத்ரிநாத்திலிருந்து கோவா வரை ஒரு பிரமாண்டமான ஸ்ரீ ராம யாத்திரை நடைபெற்றது. விழாவில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று இந்தியா ஒரு கலாச்சாரமறுமலர்ச்சியை அனுபவித்து வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் மறுசீரமைப்பு, காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல்,உஜ்ஜயினியில்உள்ளமகாகாலேஸ்வர் கோயில்விரிவாக்கம்ஆகியவைநாட்டின்மீண்டும்ஏற்பட்டுள்ளவிழிப்புணர்வுமற்றும்ஆன்மிகபாரம்பரியத்தின்தீவிரமறுமலர்ச்சியைஎடுத்துக்காட்டுகின்றன.பல நூற்றாண்டுகளாக ஏராளமான சவால்களை எதிர்கொண்ட போதிலும் கோவா, அதன் பாரம்பரியத்தை பாதுகாத்து படிப்படியாக வலுப்படுத்தி உள்ளது. கோவாவில் கோயில்கள், மரபுகள், மொழி என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளான காலங்கள் இருந்தன. ஆனால் இந்த அழுத்தங்கள், சமூகத்தின் உறுதியை ஆழப்படுத்தி அதன் கலாச்சார அடையாளத்தை வலுப்பதின. ஒவ்வொரு கலாச்சார மாற்றத்திற்குப் பிறகும் கோவா அதன் அசல் வடிவத்தைப் பாதுகாத்து வருகிறது. இது கோவாவின் தனித்துவமான பண்பு.ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடம் ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஏராளமான சவால்களைஎதிர்கொண்டு தப்பிப்பிழைத்து, தொடர்ச்சியின் அடையாளமாக நிற்கிறது. காலங்கள் மாறின, நாட்டிலும் சமூகத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. மாறி வரும் சவால்களுக்கு மத்தியில் மடம் அதன் திசையை இழக்கவில்லை. மாறாக, அது மக்களுக்கு வழிகாட்டும் மையமாக உருவெடுத்து நிற்கிறது. இதுவே அதன் மிகப் பெரிய அடையாளம்” என தெரிவித்தார்.த்வைத தத்துவத்தை பின்பற்றும் ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடம் என்பது முதலாவது கௌட் சரஸ்வத் பிராமண வைஷ்ணவ மடமாகும். இது குஷாவதி ஆற்றங்கரையில் உள்ள பர்த்தகலியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.