விபி-ஜி ராம் — இந்தப் பெயர் மாற்ற மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்….
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி, புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங்சவுகான்மக்களவையில்தாக்கல்செய்தார்.இந்த புதிய ஊரக வேலை உறுதி மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இந்தப் பெயர் மாற்ற மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதையும்,புதியதிட்டத்தில்உள்ளமுக்கியஅம்சங்களையும் எதிர்த்து காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் வேணுகோபால் மற்றும்ஜெய்ராம்ரமேஷ்,மத்தியஅரசின்நடவடிக்கையைகடுமையாகவிமர்சித்தனர்.அப்போது வேணுகோபால் பேசுகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்கொண்டுவரப்பட்டது, அதன்மூலம்வறுமைகுறைந்ததுடன்,தொழிலாளர்களின்இடம்பெயர்வும்கட்டுப்படுத்தப்பட்டதுமேலும்,
கிராமப்புறங்களில் கால்வாய்கள், அணைகள் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் உருவானது. கொரோனா பெருந்தொற்று போன்ற நெருக்கடியான காலங்களில் இந்த திட்டம் மக்களின் பாதுகாப்புக் கவசமாக செயல்பட்டது..ஆனால், புதிய “ஜி ராம் ஜி” திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு உறுதியான உத்தரவாதம் இல்லை, போதுமான நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு மறைமுகமாக அழித்து வருகிறது என்று கடுமையாக குற்றஞ்சாட்டினார். இதனைத் தொடர்ந்து பேசிய ஜெய்ராம் ரமேஷ், “மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்கள் விவசாயிகளின் போராட்டத்தால் திரும்பப் பெறப்பட்டது நினைவிருக்கலாம்.. அதுபோலவே இப்போதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள ஜி ராம் ஜி திட்டம் நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.. எனவே, புதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஊரக வேலை உறுதி திட்டத்தையே தொடர வேண்டும்..”மகாத்மா காந்திஊரகவேலைவாய்ப்பு திட்டத்தை காக்கும் இயக்கம்” என்ற பெயரில், காங்கிரஸ் சார்பில் ஜனவரி 8-ம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் தொடங்கப்படும், இந்த போராட்டம் தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும்.. இது தேசிய அளவிலான இயக்கமாக இருக்கும்” அதிரடியாக அறிவித்திருந்தார்.. அந்தவகையில் இன்று முதல் காங்கிரஸ் தன்னுடைய போராட்டத்தை கையில் எடுக்கும் என்று தெரிகிறது100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயர் மீண்டும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி ஜனவரி 24ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 30ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஏற்கனவே அறிவித்திருக்கிறார். முன்னதாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை “VBG RAMG” என பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.