fbpx
Others

நீடாமங்கத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி…..


சுற்றுச்சூழல் தினத்தில் நெகிழி இல்லா உலகம் படைப்போம் விழிப்புணர்வு .நீடாமங்கலம் ஜூன் 5
உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தேசிய பசுமை படை மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நெகிழி இல்லா உலகம் படைப்போம் எனும் மையக்கருத்துடன் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தேவி லட்சுமி தலைமை வகித்தார் பல்நோக்கு சேவை இயக்க தலைவர் பத்மஸ்ரீ ராமன் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் துணைச் செயலாளர் செந்தில்குமார் செந்தில் நாதன் நூலகர் ராகவன் ஆகியோர் மாணவர்களிடம் காற்று மாசுபாடு நில மாசுபாடு நீர் மாசுபாடு ஏற்பட காரணங்களை பற்றிய விழிப்புணர்வு செய்து நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளித்தனர் மேலும் பொருட்களை வாங்க செல்லும் பொழுது துணி பைகளை பயன்படுத்த வேண்டும் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாத நெகிழிகளை அறவே தவிர்க்க வேண்டும் என்றும், உணவுகள் மற்றும் உணவுப் பொருள்களை வாங்குவதற்கு பாத்திரங்களை எடுத்துச் சென்று பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு செய்தனர். அரசு உயர்நிலை பள்ளி பெரம்பூரில் நடைபெற்ற நிகழ்விற்கு தலைமையாசிரியர் இளஞ்செழியன் தலைமை வகித்தார் இதில் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தில் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. சுற்றுச்சூழலைக் காக்க மரக்கன்றுகள் அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர் . காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் திலகம் தலைமை வகித்து மாணவர்களுக்கு துணி பைகளை வழங்கினார் . மணிமேகலை நடுநிலை பள்ளியில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் பாபு தலைமை வகித்தார்நிகழ்வில் மாணவர்கள் நெகிழிக்கு மாற்றாக துணி பையை பயன்படுத்துவோம் எனும் வாசகங்களை கூறி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மனித சங்கிலி போன்று அமைத்து விழிப்புணர்வு செய்தனர் . விழிப்புணர்வு நிகழ்வில் ஈடுபட்ட பல்வேறு பள்ளிகளை சார்ந்த 200 மாணவர்களுக்கு தேசிய பசுமை படை சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது . மேலும் பல்நோக்கு சேவை இயக்கத்தினரால் உணவகங்களில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நெகிழிகளில் உணவுப் பொருட்களை வாங்குவதை தவிர்ப்போம் எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டது .

 

Related Articles

Back to top button
Close
Close