fbpx
Others

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கும் அபாயம்; மேலும் அதிகரிக்க வாய்ப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி அதிக அளவிலான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மத்திய சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது இந்தியாவில் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 19,984-ஐ தாண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640-ஆகவும் அதிகரித்துள்ளது.

காலையில் புதுப்பிக்கப்பட்ட அமைப்பின் தரவுகளின்படி , நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் மராட்டியத்தில்- 5,218 ஆகவும் , குஜராத்தில்- 2,178 ஆகவும், டெல்லியில்- 2156 ஆகவும், ராஜஸ்தானில் – 1659-ஆகவும், மத்தியபிரதேச மாநிலத்தில்- 1596 ஆகவும் பதிவாகியுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

மேகாலயாவில் 12 நபர்களும், கோவா மற்றும் புதுச்சேரியில் தலா ஏழு கொரோனா நோயாளிகள் உள்ளனர்.மணிப்பூர் மற்றும் திரிபுராவில் தலா இரண்டே பாதிப்புகளும் , மிசோரம் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தில் தலா ஒரு பாதிப்பும் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close