fbpx
Others

மீஞ்சூர்– விவேகானந்தா வித்யாலயா பள்ளியில்என்னால் முடியும்நிகழ்ச்சி

மீஞ்சூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் என்னால் முடியும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.வருமானவரித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வை சந்திக்கும் மாணவர்கள் பதட்டமின்றி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் என்னால் முடியும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தேர்வுகளை பயமின்றி சந்திப்பதற்கான ஆலோசனைகளைவழங்கினார்.தேர்வுகளைஎதிர்கொள்ளவதுதொடர்பானஆலோசனைகளையும், பள்ளி கல்விக்கு பிறகு உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அப்போது மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மாணவர்களுக்கு இருந்தால் எளிதில் எந்த தேர்விலும் வெற்றி பெற்று மாணவர்கள் தாங்கள் விரும்பிய பட்டப்படிப்பை எளிதில் படிக்க உதவும் எனவும் என கல்வியாளர்கள் ஆலோசனைகளை வழங்கினர். போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.பயிற்சியாளர் லயன் அமுதா மதியழகன் பயிற்சி அளித்தார்பள்ளி தாளாளர் ஆசிரியர்கள் பங்கேற்றனர் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவ மாணவியர்களை அழைத்து வருவதற்காக பேருந்து ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு உணவு குடிநீர் ஆகியவற்றை அலமேலு அம்மாள் அறக்கட்டளையின் சார்பாக அளிக்கப்பட்டதுஇதில் ஆர். எம்ஆர். ஜானகிராமன் ஒன்றிய கவுன்சிலர்கள் கதிரவன். ரமேஷ். அன்பழகன் பழவேற்காடு செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close