மதிமுகக்கு கடந்தமுறை 6 தொகுதி,இந்த முறை 4 தொகுதி…..
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே ஏப்ரல் மாதம் மத்தியில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பணியில் இறங்கியுள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தி வருகிறது. அதில் ஆளுங்கட்சியான திமுக, கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் கடந்த தேர்தலை விட கூடுதலாக புதிய கட்சிகளை இணைந்துள்ளது. எனவே 26 கட்சிகள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் 21 கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவுள்ளது.எனவே கடந்தமுறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட இந்த தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து வருகிறது. அந்த வகையில் முஸ்லிம் லீக் கட்சி கடந்த முறை 3 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 5 தொகுதிகளை ஒதுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல மதிமுக கடந்தமுறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை 4 தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்தமுறை 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில்,தற்போது 2 தொகுதியை திமுக குறைத்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த வைகோவை சமாதானம் செய்யும் வகையில் அமைச்சரவையில்இடம்வழங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்ததாககூறப்படுகிறது. இதனையடுத்து தான் தனி சின்னத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சாத்தூர் அல்லது கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பாக போட்டியிட்ட துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே கட்சியின் அங்கீகாரத்தை பெற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த முறை சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது.எனவே தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அமைச்சரவையில் வைகோவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. அமைச்சரவையில் பங்கு என கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், திமுக ஆரம்பத்தில் இருந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணி கட்சியான மதிமுகவின் வைகோவிற்கு மட்டும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மாற்றுக்கட்சியாக இருந்தாலும் திமுகவின் தொடர் வெற்றிக்கு மட்டும்மல்லாமல் ஆட்சிக்கு எதிராக பல்வேறு புகார்கள் வந்தபோதும் பக்கபலமாக பெரிய அளவில்உதவியாகஇருந்துள்ளார்.மேலும்திமுகதலைவர்ஸ்டாலினோடும் நெருங்கிய நட்போடு இருப்பதால் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.