முன்னர் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் பரிசு வரும் 7-ஆம் தேதி முதல் வழங்கப்படும் – அரசாணை வெளியிடு

பொங்கல் பணிடிகையை முன்னிட்டு முன்னர் தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுகளான பச்சரிசி, முந்திரி, திராட்சை ,ஏலக்காய், கரும்பு , சர்க்கரை ஆகியவற்றுடன் தற்போது கூடுதலாக ஆயிரம் ரூபாயும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த புதன் கிழமை அறிவித்திருந்தார்.
ஆனால் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கருத்தில் கொண்டு அங்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட முடியாது என்று தெரிவித்திருந்தார். மேலும் இவ்வாறு தொடங்கப்படும் இந்த திட்டத்தால் 2 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பொங்கல் பரிசை வழங்குவதற்கு நிதி ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அதில் வரும் 7-ஆம் தேதிமுதல் இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன் , ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.















