fbpx
Others

மக்களவையில்தெறிக்கவிட்ட ராகுல் காந்தி….

. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை பேச வைப்பதற்காக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாI go to jail if PM Narendra Modi wants - Rahul gandhi speech in Lok sabha தீர்மானத்தை கொண்டு வந்தன. அதன் மீது நேற்று முதல் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது  இதனால் அவர் இழந்த வயநாடு எம்பி பதவியை மீண்டும் பெற்று இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு பூஸ்டாக அமைந்து உள்ளது. நேற்றே அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பேசவில்லை. இன்று அவர் பேசுவார் என்று அறிவிப்பு வெளியானது.அதை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் ஆளும் கட்சி எம்பிக்களின் கூச்சலுக்கு மத்தியில் ராகுல் காந்தி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான தன்னுடைய உரையை நிகழ்த்த தொடங்கினார். நான் அதிகம் யாரையும் தாக்கிப்பேசப்போவது இல்லை, பாஜகவினர் பயப்படாதீர்கள் என்று உரையை தொடங்கிய அவர், “நான் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தை தொடங்கினேன். அது இன்னும் முடியவில்லை.அன்பை செலுத்துவதற்காகதான் நான்I go to jail if PM Narendra Modi wants - Rahul gandhi speech in Lok sabha நடைபயணத்தை மேற்கொண்டேன் எனபுரிந்துகொண்டேன். என்னுடைய மனதில் இருந்த வெறுப்பை அகற்றிவிட்டு அன்பையே நிறைத்து வைத்து இருக்கிறேன். நான் ஒற்றுமை யாத்திரையின் மூலமாக உண்மையான இந்தியாவை பார்த்தேன். இந்திய விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதை நடைபயணம் மூலமாக உணர்ந்துகொண்டேன். விவசாயிகளின் வலிகளை சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே கிடையாது. ஒற்றுமை இந்தியா யாத்திரை என்னை மாற்றி இருக்கிறது.” என்று பேசிய அவர், பிரபல பாரசீக கவிஞர் ரூமியின் கவிதையான,’இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் இதயத்திற்கே செல்லும்.’ என்று சுட்டிக்காட்டி பேசினார்.அதை தொடர்ந்து மதியம் 12 . தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால் சிறைக்கு செல்வதற்கு கூட நான் தயாராக இருக்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அவதூறுகள், விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறேன். நான் நம்பும் கொள்கைக்காக உயிரையும் விட தயாராக உள்ளேன்.” என்று தெரிவித்தார்

Related Articles

Back to top button
Close
Close