பெரியநாயக்கன்பாளையம் சிறப்புநிலை லஞ்சம் வாங்குவதில் முதல் பரிசு பெற்ற பேரூராட்சி ?
கோவை, ஜுலை, 28 :கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சிறப்புநிலை பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் பரமசிவம் இவர் ஏற்கனவே காரமடை நகராட்சியில் இருந்து, அங்கு பணிபுரியும் பணியாளர்களால் துரத்தி விடப்பட்டவர். இந்நிலையில் பரமசிவம், தனது வேலையை பார்க்காமல், இவருக்கு சம்பந்தமில்லாத வேலையை பார்பதாகவும், பேரூராட்சி போகும் வழியிலே சுகாதாரத்தை பராமரிக்கும், பொறுப்பு இவருக்கு இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு சுகாதாரத்துறை ஆய்வாளர் என்ற பெயரில் லஞ்சம் வாங்குவதிலேயே குறிக்கோளாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது! பேரூராட்சி தலைவரின் வலது இடது எல்லாம் இவர்தான் என்றும், அதனால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நீங்கள் பேரூராட்சி தலைவரிடம் புகார் கூறினாலும், பேரூராட்சி தலைவர் விஷ்ணு பிரசாத் என்னிடம் இதைப் பற்றி எந்த விளக்கமும் கேட்க மாட்டார். என்று தெனாவட்டாக பலரிடம் பேசி வருகிறார் என்று பொது மக்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக இவரிடம் 20-06-2025 மதியம் 12:30 மணி அளவில் விளக்கம் கேட்கும் போது இவர் பத்திரிகையாளரை வாய்க்கு வந்தபடி திமிராக பேசியது அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இவருக்கு ஆதரவாக பல youtube சேனல்களை இவருடைய அசிஸ்டன்ட்டிடம் கூறி அந்த youtube சேனல் மற்றும் போலி பத்திரிகையாளருக்கு அவர்கள் ஐடி கார்டை வாங்கி பார்த்து அவர்கள் பெயரை ஒரு புத்தகத்தில் எழுதி நூறு ரூபாய் இவருடைய அசிஸ்டன்ட் சோமு மூலமாக கொடுப்பதாக கூறுகின்றனர். அந்த பேரூராட்சியில், இவர் வாங்கும் லஞ்சப் பணத்தை பிரித்துக் கொடுப்பதும், இதற்கு பேரூராட்சி தலைவரும் உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது. இது மட்டுமா டீ கடையில் மாமூல் வசூல் பண்ணும் இடத்தில் 2026 இல் நடிகர் விஜய் தான் ஆட்சி அமைப்பார் என்றும் தற்போது இருக்கும் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் தவேக ஆட்சி அமைத்தவுடன் விஜய் அவர்கள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் ஊழல் வழக்குக்காக சிறையில் தள்ளி விடுவார் என்றும், இவர் எங்கே எல்லாம் போகிறாரோ அங்கே எல்லாம் பேசி வருவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள், இது மட்டுமா பெரியநாயக்கன்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் விஷ்ணு பிரசாத் 2026 இல் விஜய் ஆட்சி அமைத்தால் இவர் மூலமாக அக்கட்சியில் போய் சேர்ந்து விடுவார் என்றும், பல இடங்களில் பேசி வருவதாக கூறுகிறார்கள், இவர் அரசு அதிகாரியா இல்லை தவெக நிர்வாகியா என்று அந்த பகுதி மக்கள் பேசிக்கிறார்கள், ஏற்கனவே காரமடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிக அளவில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட காரணத்தாலும் அங்கு பணி புரியும் துப்புரவு பணியாளர்களை மரியாதை இல்லாமல் பேசியது காரணத்தாலும் அங்கு எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தி இவரைதுரத்திவிட்டுஇருக்கிறார்கள்,தற்போதுபெரியநாயக்கன்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சியில் எப்படியோ இங்கு வந்து அமர்ந்து அதைவிட ஒரு படி மேலே போய் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார், தமிழக அரசு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஒரு ஆய்வை மேற்கொண்டால் அங்கு சுகாதாரம் எப்படியெல்லாம் இருக்கிறது என்ற உண்மை உங்களுக்கே தெரிய வரும், ஆகவே தமிழக அரசு உடனடியாக தவெக ஆதரவாளரான பரமசிவம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்தப் பகுதியில் இருக்கும் பொது மக்களின் கருத்து !

