fbpx
Others

விழுப்புரம் M.P தொகுதி வாக்குஎண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது..

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதானது. வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த 39 சிசிடிவி கேமராக்களில், தற்போது மழை, காற்றால் 7 சிசிடிவி பழுதானது. ஏற்கனவே ஒரு முறை சிசிடிவி கேமரா பழுதானபோது, மீண்டும் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு மனு அளிக்கப்பட்டது.விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரித்து 6 ஸ்ட்ராங் அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரி வளாகம் முழுவதும் மொத்தம் 39 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 7 கண்காணிப்பு கேமரா, நேற்று இரவு பழுதடைந்தது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரிக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.திடீரென விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக அங்கு பொருத்தபட்ட 39 கேமராக்களில் 7 கேமராக்கள் பழுதாகி இயங்கவில்லை என தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் தெரியவந்ததும் மாவட்ட அதிகாரியின் ஒப்புதலுடன் உடனடியாக பழுது நீக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 3ம் தேதி 30 நிமிடங்கள் கேமராக்கள் பழுதாகி இயங்கவில்லை. அதனை சரி செய்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 7 கேமராக்கள் பழுதடைந்த விவகாரம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது…

Related Articles

Back to top button
Close
Close