நீடாமங்கலம் – அப்துல்கலாம் பிறந்தநாள் பள்ளிகளில் மரக்கன்றுகள்வளர்க்கும் பயிற்சி.

நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ABJ.அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வளர்க்கும் பயிற்சி அளித்து மரக்கன்றுகள் வளர்க்க விழிப்புணர்வு செய்யப்பட்டது.நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் காந்தி தலைமை வகித்து மரக்கன்றுகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வாறு நன்மை செய்கிறது என்றும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மரக்கன்றுகள் வளர்ப்பதை மிகவும் நேசித்தார்.அவர் கணவு நிறைவேற நாம் செயல்பட வேண்டும் என்று மாணவர்களிடம் எடுத்துரைத்தார். மரக்கன்றுகளின்
விதைகள்பைகளில் எவ்வாறு வளர்ப்பது என்று பல்நோக்கு சேவை இயக்க உறுப்பினரும், ஆசிரியருமான சிவக்குமார், ஓவிய ஆசிரியர் முருகானந்தம் உடற்கல்வி ஆசிரியர் சித்தார்த்தன் ஆகியோர் விளக்கம் அளித்து பயிற்சி அளித்தனர். வளர்வதற்கு தயாராக உள்ள மரக்கன்றுகளின் விதைகள் மற்றும் பைகள் பல்நோக்கு சேவை இயக்கத்தால் வழங்கப்பட்டது மேலும் மரக்கன்றுகளை சிறப்பான முறையில் வளர்க்கும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பல்நோக்கு சேவை இயக்கத்தால் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளி பெரம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காளாச்சேரி மேற்கு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாசுதேவமங்கலம் மன்னார்குடி மணிமேகலைநடுநிலைப்பள்ளி,ஆகிய பள்ளிகளுக்கு பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.